ஆழித்தேரை அலங்கரிக்கும் குதிரை, யாழி பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரைஅலங்கரிக்கும் குதிரை, யாழி பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரைஅலங்கரிக்கும் குதிரை, யாழி பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
ஆழித்தேர்
தொன்மையான தலங்களில் திருவாரூர் தியாகராஜர் கோவில் முதன்மையானது. சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரை பெற்ற கோவிலாக இந்த கோவில் உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம்.
வர்ணம் பூச்சு
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா தொடங்கிய நிலையில் வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட ஆழித்தேரின் முன்பு 4 குதிரைகள், ஒரு யாழி கம்பிரமாக காட்சியளிக்கும்.
இதையொட்டி குதிரை பொம்மைகள், யாழி புதிதாக தயாரிக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தற்போது 4 குதிரைகள், ஒரு யாழி தயார் செய்யப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மிகுந்த உயிரோட்டத்துடன், கலைநாயத்துடன் தயாரான குதிரை, யாழி பொம்மைகள் கண்ணை கவரும் வகையில் உள்ளது.
Related Tags :
Next Story