நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்


நெல் மூட்டைகளை  சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 9 March 2022 12:06 AM IST (Updated: 9 March 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல்கொள்முதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில்  கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் மேலும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. நடப்பாண்டில் உரத்தட்டுப்பாடு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் என பல்வேறு சோதனைகளை தாண்டி விவசாயிகள் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதில் தொடர்ந்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 
மழை
இந்தநிலையில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இந்த பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஏராளமான நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. 
தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடும்பத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.
சேமிப்பு கிடங்குகளுக்கு
மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள 67 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆதிரெங்கம், தில்லைவிளாகம், கோமளப்பேட்டை, கரையங்காடு, வேளூர் தேசிங்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
எனவே மார்ச் 30-ந் தேதி வரை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் முழுவீச்சில் நெல் கொள்முதலை தொடர வேண்டும். மேலும் தேங்கி் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து  திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story