தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 9 March 2022 12:07 AM IST (Updated: 9 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மயானத்திற்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் காலனி மயானம் வெள்ளாற்றங்கரை ஓரமாக உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது மயானப்பகுதி அரித்து செல்லப்படுகிறது. இன்னும் சில காலங்களில் மயானம் இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும். எனவே அகரம்சீகூர் காலனி மயானத்திற்கு தடுப்பு சுவர் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்,  அகரம்சீகூர், பெரம்பலூர்.

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், பல்லவராயன்பத்தை ஊராட்சி பல்லவராயன்பத்தை (மேற்கு), பல்லவராயன்பத்தை (கிழக்கு) ஆகிய பகுதிகளில் முறையான சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ரேஷன் கடை, முறையான குடிநீர் வசதி, மயானம் வசதி இல்லை. பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் விளையாட்டு அரங்கமும், நூலகமும் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தங்களின் பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீரமணிகண்டன், பல்லவராயன்பத்தை, புதுக்கோட்டை.

மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், கூவத்தூரில் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பள்ளியில் 12ம் வகுப்பு வரை இல்லாததால் இப்பகுதி மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு படிக்க அருகிலுள்ள பூவாணிபட்டு,  ஆண்டிமடம், கல்லாத்தூர், ஜெயங்கொண்டம், இறவாங்குடி, திருமுட்டம், வரதராஜன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில்  12-ம் வகுப்பு படிக்க செல்கின்றனர். பள்ளிகள் தொலைதூரம் உள்ளதால் இப்பகுதி மாணவ-மாணவிகள் நடந்தும், சைக்கிளிளும், பஸ் ஏறி சென்றும் படித்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூவத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
 அருமைநாதன், கூவத்தூர், அரியலூர்.

மூடி இல்லாத பாதாள சாக்கடை 
திருச்சி மாநகராட்சி உறையூர் சோழராஜபுரம்- தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையின் அடியில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரி செய்வதற்காக ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி ஒன்று இல்லாமல் பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.   இந்த பள்ளத்தில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் மரக் குச்சி ஒன்றை பாதாள சாக்கடையில்  வைத்துள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி.

பாலத்தை அகலப்படுத்த வேண்டும் 
கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மைலாடி இரட்டை வாய்க்கால் பாலமானது ஒரு பாலமாக கட்டி முடிக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. பழைய பாலம் அகலப்படுத்தப்படாமல் பழைய பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.  இந்த பாலத்தை அகலப்படுத்தி வலுவாக கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுந்தர் , குளித்தலை, கரூர். 

கழிவுகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெய்தலூர் காலனி முதல் கட்டாணி மேடு செல்லும் சாலையின் இருபுறமும் அப்பகுதியில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நெய்தலூர், கரூர். 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட மொரைஸ் கார்டன், ரன்வே நகர், ஐஸ்வர்யா எஸ்டேட், வெங்கடேஸ்வரா நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ரன்வேநகர், திருச்சி. 

குடிநீர் குழாய்கள் உடைப்பு 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பிச்சாண்டார் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழத்தெரு கிராமத்தில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கு கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்கள்  உடைக்கப்பட்டன. இந்த நிலையில் கால்வாய் அமைத்த பிறகும் உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
செல்வம், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 

மூடி இல்லாத பாதாள சாக்கடை 
திருச்சி மாநகராட்சி உறையூர் சோழராஜபுரம்- தனியார் கல்லூரிக்குச் செல்லும் சாலையின் அடியில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரி செய்வதற்காக ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி ஒன்று இல்லாமல் பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.   இந்த பள்ளத்தில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் மரக் குச்சி ஒன்றை பாதாள சாக்கடையில்  வைத்துள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி.


Next Story