லாரிகள் வேலை நிறுத்தம்
திருத்துறைப்பூண்டியில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்மூட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்மூட்டைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகள் வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 600 லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நெல்மூட்டைகளை ஏற்றி வருகின்றன. இந்த லாரிகளுக்கு குறைந்த அளவு வாடகை பணம் வழங்குவதாக கூறி லாரிகளின் உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் லாரிகள் இயக்கப்படாமல் வேதாரண்யம் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நெல் மூட்டைகள்
மேலும் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லாரிகள் இயக்கப்படாததால் திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள 69 நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல்மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் பாழாகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இதை நம்பியுள்ள 1000 ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே உடனடியாக வாடகையை உயர்த்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேலை நிறுத்தம் தொடராமல் இருக்க லாரி உரிமையாளர்களை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story