கொசு மருந்து அடிக்கும் பணி
ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீடுகளில் தேங்கி உள்ள பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலர் சோழராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story