இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி பெண் மனு


இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி பெண் மனு
x
தினத்தந்தி 9 March 2022 12:29 AM IST (Updated: 9 March 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் வாகன விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி பெண் மனு

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தர்காவலசை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சரஸ்வதி (வயது44). இவர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவர் நாகராஜ் குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் வாகன விபத்தில் இறந்துவிட்டதாக அங்கிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு நானும் எனது 2 பெண் குழந்தைகளும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். எனது கணவரின் இறுதிசடங்குகளை சொந்த ஊரில் செய்வதற்கும். கடைசியாக எனது பெண் குழந்தைகள்  தந்தையின் முகத்தை காண்பதற்கும் எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story