நயினார்கோவில், கடலாடி பகுதிகளில் மின்தடை
நயினார்கோவில், கடலாடி பகுதிகளில் மின்தடை
சாயல்குடி
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட நயினார்கோவில், வாணியவல்லம், சிரகிகோட்டை, பகைவென்றி ஆகிய பகுதிகளில் இன்று(புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் தெரிவித்துள்ளார்.மேலும் கடலாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஓரிவயல் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) மீனங்குடி, ஓரிவயல், மாரந்தை, மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, சவேரியார்பட்டிணம், காமாட்சிபுரம், கருமல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story