பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்; மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
திருப்பத்தூர்
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
நுகர்வோர் தினவிழா
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தலைமை தாங்கி நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு பேசினார்.
தவிர்க்க வேண்டும்
அப்போது நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நிறம் ஊட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தரமற்ற பொருட்கள், கெட்டுப் போன, காலாவதியான பொருட்களை ஏதேனும் கடை மற்றும் உணவகங்களில் விற்பனை செய்வது தெரியவந்தால் அந்த நிறுவனங்களில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story