ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 March 2022 12:29 AM IST (Updated: 9 March 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 21-வது வார்டு ஆயிஷாபி நகர், நதிசிலாபுரம், அனிஸ்மனை ஆகிய பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

இது தொடர்பாக பலமுறை நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 

இதனால் அப்பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் உடனடியாக டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story