திருப்பத்தூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் இடமாற்றம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
திருப்பத்தூரில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த நவநீதம், ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆம்பூர் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆம்பூர் துணை தாசில்தாராக பணிபுரிந்த ஜீவிதா ஆம்பூர் தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஜெகதீசன் அங்கிருந்து திருப்பத்தூர் தேர்தல் துணை தாசில்தாராகவும், நாட்டறம்பள்ளி தேர்தல் துணை தாசில்தார் திருமலை திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த கண்ணன் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த சுதாகர் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணிபுரிந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் வாணியம்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் அமர்குஷ்வாஹா பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story