தேர்ச்சி பெற்ற 2-ம் நிலை போலீசாருக்கு பயிற்சிக்கான ஆணை
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 2-ம் நிலை போலீசாருக்கு பயிற்சிக்கான ஆணையை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வழங்கினார்.
திருப்பத்தூர்
தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர் தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வுகள் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 71 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கு பயிற்சியில் சேருவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், பயிற்சிக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆண் போலீசாருக்கு வேலூரிலும், பெண்களுக்கு சேலத்திலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story