ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 March 2022 12:33 AM IST (Updated: 9 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

காப்புக்காடு அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

புதுக்கடை:
காப்புக்காடு அருகே
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
காப்புக்காடு  அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரமணி (வயது60), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று காப்புக்காடு அருகே உள்ள குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரைப்பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்றார். வேலை முடிந்த பின்பு ஆற்றில் இறங்கி நீந்தி மறுகரைக்கு சென்றார். 
அப்போது எதிர்பாராதவிதமாக வைரமணி திடீரென வெள்ளத்தில் மூழ்கினார். உடனே, கரையில் நின்றவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வைரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரது மகன் பைஜு கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இட் ரியாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story