சிறுமிக்கு திருமணம்; பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு
சிறுமிக்கு திருமணம் செய்தது தொடர்பாக பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும், கூமாபட்டியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து வத்திராயிருப்பு சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகா ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்ததாக தர்மராஜ், மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன், தாயார் புது மாடத்தி, சிறுமியின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story