அரசுப்பள்ளி ஆசிரியர் இழந்த ரூ.35 ஆயிரம் மீட்பு


அரசுப்பள்ளி ஆசிரியர் இழந்த ரூ.35 ஆயிரம் மீட்பு
x
தினத்தந்தி 9 March 2022 12:37 AM IST (Updated: 9 March 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

அரசுப்பள்ளி ஆசிரியர் இழந்த ரூ.35 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 57), அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்பேங்கிங்கை புதுப்பிக்கும்படி இணைப்பு (லிங்க்) ஒன்று வந்துள்ளது. அதனை உண்மை என்று நம்பிய மகாராஜன் அதில் வங்கி விவரங்களையும், ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் (ஓ.டி.பி.) பதிவிட்டுள்ளார்.

 சிறிதுநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிந்தனர். பின்னர் அந்த வங்கிக்கணக்கை முடக்கி, அதில் இருந்து ரூ.35 ஆயிரத்தை மீட்டனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று மகாராஜனிடம் வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல்களை நம்பி வங்கியின் விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Next Story