காட்பாடி அரசு பெண்கள் பள்ளி சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
காட்பாடி அரசு பெண்கள் பள்ளி சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காட்பாடி
காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சரளா தலைமை தாங்கினார். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘மாணவிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். சாலை விதிகளை மதிப்போம், விபத்துகளை தவிர்ப்போம்’’ என்றார்.
ஊர்வலத்தில் மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா லோகநாதன், வேலூர் துணைத் தலைமை போக்குவரத்து காப்பாளர்கள் ஆர்.சீனிவாசன், ரமேஷ்குமார் ஜெயின், ரெட்கிராஸ் சங்க காட்பாடி கிளை செயலாளர் சிவவடிவு, டாக்டர் தீனபந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் தொடங்கி சித்தூர் சாலை, வள்ளிமலை சாலை, குமரன்நகர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
Related Tags :
Next Story