அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கணக்காளர் பணியிடை நீக்கம்
ஊராட்சி ஒன்றிய கணக்காளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
அரக்கோணம்
திமிரி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிதி முறைகேடு தொடர்பாக தணிக்கையில் ஈடுபட்டார். இதில் 2019-2020-ம் ஆண்டில் நிதி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சமீபத்தில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாற்றலாகி அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்து வரும் கணக்காளர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்ய ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story