மூலப்பொருள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
4 வழிச்சாலை பணிக்கான மூலப்பொருள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மக்கள் மசோதா கட்சி சார்பில் அதன் தலைவர் ரூபன், துணைத்தலைவர் பாபுசங்கர், மாநில செயலாளர் சுந்தரராஜன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், வக்கீல் பிரசாத் உள்ளிட்டோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு, ராட்சத சிமெண்டு கலவை தயாரிப்பு யூனிட் ஆகியவை காத்திருப்பு ஊராட்சி பிரதான சாலை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் நிறுவப்பட்டுள்ள இடத்தை சுற்றி மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ளது. சாலைப்பணிக்கு தேவையான மூலப்பொருட்களை பல லட்சம் டன் சேமித்து வைத்து பயன்படுத்தி வருவதால் அதில் இருந்து வெளியேறும் மாசுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சிமெண்டு கலவை தயாரிப்பு யூனிட், மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story