பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் கைது


பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 9 March 2022 12:46 AM IST (Updated: 9 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

தாயில்பட்டி, 
சிவகாசி அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்த கணேசன் (வயது 25) சம்பவ இடத்தில் பலியானார். மேலும் விபத்தில் அமீர் பாளையத்தை சேர்ந்த ராமர் (19) படுகாயமடைந்து சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் பிரம்மன் (48), போர்மேன் நாகராஜன், சூப்பர்வைசர் கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், சின்னவள்ளிக்குளத்தை சேர்ந்த சூப்பர்வைசர் கணேசனை (52) போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், அந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story