7½ பவுன் நகைகள் திருட்டு
நீடாமங்கலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைக்கு சென்றார்
நீடாமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆதனூர் மண்டபம் பெரியக்கோட்டை ரோடு தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது60). விவசாயி. இவர் கடந்த 5-ந் தேதி தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீ்ட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.
மறுநாள் மாலை அக்கம்பக்கத்தினர் குணசீலன் வீட்டின் முன் பக்ககதவு பூட்டியும், பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக குணசீலனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசில் புகார்
இது குறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து குணசீலன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story