நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்
நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராவரம் காலனியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து மாணவியின் தாய் நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதில் ஆரணி பகுதியை சேர்ந்த வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறி உள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story