எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 9 March 2022 12:51 AM IST (Updated: 9 March 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

திருச்சி, மார்ச்.9-
கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து சமீபத்தில் ரெயில்வே வாரியம் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத சேவையை தொடங்க கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருச்சி கோட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் சேவைகள் தொடங்கப்படுகிறது.  திருச்சியில் இருந்து சென்னை வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி வழியாக செல்லும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ், மங்களுரூ எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது. 20-ந்தேதி திருச்சி வழியாக செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், மே மாதம் 1-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து செல்லும் காரைக்கால் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், ராேமசுவரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இந்த சேவை 2 வருடங்களுக்கு பிறகு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. முன்பதிவில்லா பெட்டிகளில் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். முககவசம் அணியதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரெயிலவே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story