மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
ராமநத்தம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் ராசு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக 243 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story