பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா(வயது40). இவரது தங்கை மகன் சஞ்சய். இவர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த அரவிந்தன் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சஞ்சய்யை அரவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சங்கீதா தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் 4 பேர் சேர்ந்து சங்கீதாவை திட்டி புடவையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சங்கீதா நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அரவிந்தன், கபில், காமராஜ், செந்தில்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை (27) கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story