குழந்தைகள் பாதுகாப்பு சங்க பணிக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்
குழந்தைகள் பாதுகாப்பு சங்க பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுபடுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர், தகவல் பதுப்பாளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர், புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதே போல் இளைஞர் நீதி குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூக நல உறுப்பினர்கள் 3 ஆண்டு கலத்துக்கு மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
தகுதியான நபர்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story