புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் காளியாவிட்டம் நிகழ்ச்சி

திருச்சி, மார்ச்.9-
திருச்சி புத்தூரில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் அருகே குழுமாயி அம்மன்கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த மாதம் 27-ந் தேதி காப்பு கட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மறுகாப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு காளியாவிட்டம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. உறையூரில் இருந்து நேற்று இரவு யானை மீது மாலைகள், மங்கலபொருட்களை வைத்து உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். கோவிலில் இருந்து குழுமாயி அம்மன் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு புத்தூர் மந்தைக்கு வந்து சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) சுத்தபூஜை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள்வார். 11-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 12-ந் தேதிசாமி குடிபுகுதலும் நடைபெறுகிறது.

Related Tags :
Next Story