நாட்டு வெடி விபத்தில் மாணவர் சாவு
சேத்தியாத்தோப்பு அருகே நாட்டு வெடி விபத்தில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
சேத்தியாத்தோப்பு.
சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முகம்தெரியாகுப்பத்தை சேர்ந்த ராமசாமி(வயது 70) இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் வைத்திருந்த வெடி வெடித்ததில் 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிதம்பரம் முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மாணவர் தனுஷ்(18) மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இவர், வடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story