பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடி; 4 பேர் கைது


பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடி; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 March 2022 1:21 AM IST (Updated: 9 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

பெங்களூரு:
பெங்களூரு ஜெயநகர் 3-வது பிளாக் பகுதியில் உள்ள பூங்கா முன்பு 4 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் ஜெயநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் அங்கு போலீசார் சென்று 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் மதிப்பெண் சான்றிதழ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.  அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து கர்நாடக பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலியாக மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அந்த மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரிக்கு சரியாக செல்லாத மாணவர்கள், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை குறிவைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் ரகு(வயது 34), தர்மகுமார்(39), தீபக்(32), நரேஷ்(38) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.4.60 லட்சம் ரொக்கம், 2 மடிக்கணினி, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story