10-ம் வகுப்பு, பிளஸ்-2 தனித்தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனித்தேர்வர்கள்
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற மே மாதம் நடைபெறவுள்ள, 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக பிளஸ்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள்அனைவரும், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்கும், பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து இன்று (புதன் கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரையிலான நாட்களில் ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 18-ந்தேதி முதல் 21-ந் தேதி வரையிலான நாட்களில்(ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக்கட்டணத்துடன் மேல்நிலை வகுப்புக்கு கூடுதலாக ரூ.1000, 10-ம் வகுப்புக்கு கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கால அட்டவணைகளை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Related Tags :
Next Story