கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 March 2022 1:28 AM IST (Updated: 9 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது

வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், கடுகூர் அருகே உள்ள பூமுடையான்பட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்மன், சந்தனத்தாய் அம்மன் கோவில் உள்ளது.  நேற்று முன்தினம் கோவில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். நேற்று காலை சாமி கும்பிட கோவிலுக்கு சென்ற அப்பகுதி பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. பின்னர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story