ரூ.14½ லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வழங்கினார்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை அண்ணாதுரை எம்.எல்.ஏ. வழங்கினார்.
பட்டுக்கோட்டை:-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை அண்ணாதுரை எம்.எல்.ஏ. வழங்கினார்.
ரூ.14½ லட்சத்தில் வேளாண் இடுபொருட்கள்
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் அண்ணாதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.14 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள வேளாண் இடுபொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, பட்டுக்கோட்டை வட்டார அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் அனைவரும் முதல்-அமைச்சரின் ஆணைக்கு இணங்க ஒருபோக சாகுபடி பரப்பினை இருபோக சாகுபடி பரப்பாக மாற்ற வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற முன்வர வேண்டும் என்று கூறினார்.
மாற்றுப்பயிர் சாகுபடி
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், விவசாயிகள் அனைவரும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் எனவும், தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொண்டு தென்னந்தோப்புகளை மண் வளம் மிக்கதாக மாற்றி கூடுதல் வருமானம் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வேளாண் கருவிகள், ரூ.8 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான ஜிப்சம் மற்றும் சிங் சல்பேட் ஆகிய இடுபொருட்கள் கரம்பயம், த.வடகாடு, தாமரங்கோட்டை, முதல்சேரி, எட்டுப்புளிக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராமன் செய்து இருந்தார். இறுதியில் வேளாண்மை அலுவலர் சுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story