ஒரே நாளில் 3 கோவில்களில் திருட்டு


ஒரே நாளில் 3 கோவில்களில் திருட்டு
x
தினத்தந்தி 9 March 2022 2:09 AM IST (Updated: 9 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலவன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி காசிராஜன் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று மீண்டும் பூஜை செய்வதற்காக அவர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தார். 
அப்போது அங்கிருந்த சாமி கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும்  உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  சங்கர் குமராட்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

வலைவீச்சு

இதேபோல் கீழவன்னியூர் கிராமத்தில்  வடபத்ரகாளியம்மன் கோவில் உ்ண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் முருகன் கோவிலில் சாமி கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரிலும் குமராட்சி போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 3 கோவில்களில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story