தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தண்ணீர் நிரப்பப்படுமா?
ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் போலீஸ் நிலையத்தின் அருகில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு அதன் அருகில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது குளம் முறையாக பராமரிக்கப் படாததால் தண்ணீர் வற்றி புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பறவைகள் இடம்பெயர வாய்ப்புகள் உள்ளன. எனவே, குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் நிரப்பி பறவைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ரில்பின், நெய்யூர்.
வேகத்தடை அவசியம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் டெரிக் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதசாரிகள், நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், ராமவர்மபுரம்.
நடவடிக்கை எடுப்பார்களா?
கோட்டார் முதலியார்விளை வாடகை கார் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். எனவே, மின் கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-என்.பி.பெருமாள், முதலியார்விளை, கோட்டார்.
தடுப்பு வேலி தேவை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை குமரன்புதூர் சந்திப்பு பகுதியில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதுடன், பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக பஸ்கள் வெளியே செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்த சாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை சுவர் ஓரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதபெருமாள், வடிவீஸ்வரம்.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
வேர்க்கிளம்பி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முதலார் தாழத்துவீடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி சேதமடைந்து சரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெனிக்ஸ், தாழத்துவீடு, முதலார்.
Related Tags :
Next Story