உக்ரைனில் இருந்து மேலூர் வந்த மருத்துவ மாணவியிடம் அமைச்சர் மூர்த்தி நலம் விசாரித்தார்


உக்ரைனில் இருந்து மேலூர் வந்த மருத்துவ மாணவியிடம் அமைச்சர் மூர்த்தி நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 9 March 2022 2:22 AM IST (Updated: 9 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து மேலூர் வந்த மருத்துவ மாணவியிடம் அமைச்சர் மூர்த்தி நலம் விசாரித்தார்.

மேலூர், 

மேலூரில் உள்ள கருத்தபுளியன்பட்டியை சேர்ந்த அழகர்- பரமேஸ்வரி தம்பதியினரின் மகள் யாஷிகாதேவி. இவர் உக்ரைனில் 6-ம் ஆண்டு மருத்துவ படிப்பு முடிவடையும் நிலையில் அங்கு நிலவி வரும் போர் காரணமாக தவித்துள்ளார். இதுகுறித்து தகவலை அமைச்சர் மூர்த்தியிடம் மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின் தெரிவித்தார். அப்போது சென்னையில் இருந்த அமைச்சர் உடனடியாக மேலூரில் உள்ள அந்த மாணவியின் பெற்றோரிடம் வீடியோ காலில் தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து மாணவி யாஷிகாதேவியை பத்திரமாக மீட்க முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாணவி யாஷிகாதேவி மீட்கப்பட்டு மேலூர் வந்தடைந்தார்.
இந்த நிலையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி நேரடியாக மேலூரில் உள்ள அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது அந்த மாணவி தன்னை மீட்க உதவிய பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன், மேலூர் நகராட்சி தலைவர் முகமதுயாசின், துணைத்தலைவர் இளஞ்செழியன், முன்னாள் யூனியன் சேர்மன் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் துரைமகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும், மேலூர் நகராட்சி கவுன்சிலர்களும் உடன் இருந்தனர்.

Next Story