மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏ.டி.எம்.கார்டை பறித்து பணம் அபேஸ்


மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏ.டி.எம்.கார்டை பறித்து பணம் அபேஸ்
x
தினத்தந்தி 9 March 2022 2:28 AM IST (Updated: 9 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏ.டி.எம்.கார்டை பறித்து பணம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

மது வாங்கி கொடுத்து தொழிலாளியிடம் ஏ.டி.எம்.கார்டை பறித்து பணம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மது வாங்கி ெகாடுத்தனர்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 24). இவர் கப்பலூர் சிட்கோபேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அன்று தோப்பூரில் உள்ள மதுக்கடைக்கு வீரமணி சென்றுள்ளார்..
அப்போது அங்கு வந்த 2 பேர் வீரமணிக்கு அறிமுகமாகி மது வாங்கி தந்துள்ளனர். இதற்கிடையில் அவர்களுடன் சேர்ந்து வீரமணி மது அருந்தி உள்ளார். பின்னர் அவர் மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் வீரமணியிடம் இருந்து ஏ.டி.எம்.கார்டு, பான்கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த ஆசாமிகள் எடுத்துசென்று விட்டனர்.

2 பேர் கைது

இதற்கிடையே மது வாங்கி தந்தவர்கள் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டதோடு ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில் நிலையூர் சந்திரபிரபு (27), கூத்தியார்குண்டு அழகுராஜா (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story