லாரி மோதி பெண் பலி


லாரி மோதி பெண் பலி
x
தினத்தந்தி 9 March 2022 2:53 AM IST (Updated: 9 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி பெண் பலியானார்

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சோலைமுத்து. இவரது மனைவி அழகம்மாள்(வயது 50).இவர் நேற்று தங்கநகரம் கிராமத்தில் இருந்து ஆடு-மாடுகளை ஓட்டிச்சென்று பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கோவில் பின்புறம் உள்ள காட்டில் மேய விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து ரோட்டை கடந்து வீட்டுக்கு செல்லும்போது பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிமெண்டு ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று அழகம்மாள் மீது மோதியது. இதில் அவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சுமார் 50 அடி தூரம் இழுத்துச் சென்று சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து அவரது மகன் அழகுதுரை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், லாரியின் டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்த கலியனை(35) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாளின் கணவர் சோலைமுத்து இதேபோல அவரது வீட்டின் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story