அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா; 6-ந் தேதி நடக்கிறது


அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா; 6-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 9 March 2022 3:02 AM IST (Updated: 9 March 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. 
பத்ரகாளியம்மன் கோவில்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு கோவில் குண்டம் விழா வருகிற 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து 23-ந் தேதி மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சியும், 29-ந் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியும், 30-ந் தேதி கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
குண்டம் விழா
31-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 5-ந் தேதி வரை அம்மன் தேர் வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 6-ந் தேதி நடைபெறுகிறது. 
இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர். 
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து கோவில் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோ சனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்நதது. கூட்டத்துக்கு கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமை தாங்கினார். அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆர்.டி.ஓ. பழனிதேவி பேசுகையில், ‘பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விழாவை நடத்த ஒத்துழைக்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்புடன் குண்டம் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். குண்டம் விழா நடைபெறும் அன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கலை நிகழ்ச்சிகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது,’ என்றார். இதில் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், கோவில் செயல் அதிகாரி சரவணன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் குணசேகரன், வனத்துறை அதிகாரி திருமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.சரவணன், எஸ்.கே.ரங்கநாதன் உள்பட கோவில் கட்டளைதாரர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story