அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை தலைவர் மீனாட்சி சுந்தரம் மரணம்
அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை தலைவர் மீனாட்சி சுந்தரம் மரணமடைந்தார்
பெங்களூரு:
அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை தலைவராக பணியாற்றி வந்தவர் மு.மீனாட்சி சுந்தரம்(வயது79). இவர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை துணைத்தலைவர் முத்துராமன், பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் சம்பத், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த மீனாட்சி சுந்தரம் பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியவர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். வருகிற 15-ந் தேதி இந்த விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story