4½ கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
எடப்பாடி பகுதியில் 4½ கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எடப்பாடி:-
எடப்பாடி பஸ் நிலையம், வெள்ளாண்டிவலசை, நைனாம்பட்டி, கடைவீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டம்ளர் போன்றவை விற்பனை செய்கிறார்களா? என நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் சுகாதார அலுவலர் முருகன், நகராட்சி என்ஜினீயர் சரவணன், சுகாதார அலுவலர்கள் ஜான் விக்டர், தங்கவேலு, நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் இருந்த 4½ கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story