கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி


கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
x
தினத்தந்தி 9 March 2022 8:52 AM IST (Updated: 9 March 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலியானார்.

தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் கொண்டகாரனுர் பகுதியை சேர்ந்தவர் வேடப்பன் (வயது 50), விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் கசப்பேரி என்னும் இடத்தில் உள்ள மதுக்கடையில் மதுவாங்கி அருந்திவிட்டு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார், வேடப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story