வலசையூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சேலம் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற வலசையூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அயோத்தியாப்பட்டணம்:-
சேலம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சேலத்தில் நடைபெற்றன. இந்த போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பந்து எறிதல் போட்டியில் விக்ராந்த் முதல் இடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் கிரி 2-வது இடத்தையும் பிடித்தனர். இதையொட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய குழு கவுன்சிலர் அருண்குமார், வலசையூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வரசி பழனிவேல், துணைத்தலைவர் அம்பிகா சின்னதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப தொடர்பாளர் பாக்கியலட்சுமி, முன்னாள் ராணுவ வீரர் ராஜா, உடற்கல்வி இயக்குனர் இ.வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் ஆர்.வெங்கடேசன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் டேனியல் உள்பட பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story