கன்னியாகுமரி-புனே எக்ஸ்பிரஸ் ரெயில்
சேலம் வழியாக கன்னியாகுமரி- புனே எக்ஸ்பிரஸ் ரெயில் 31-ந் ேததி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
சூரமங்கலம்:-
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கன்னியாகுமரி- புனே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16382) வருகிற 31-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதன்படி கன்னியாகுமரியில் இருந்து தினமும் காலை 8.25 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கோட்டயம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 10.47 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் சேலத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பொம்மிடி, ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே ெரயில் நிலையம் சென்றடையும்,
இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் புனே- கன்னியாகுமரி தினசரி எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண்-16381) அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் புனே ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, பொம்மிடி வழியாக சேலம் ெரயில் நிலையத்துக்கு மறுநாள் இரவு 9.07 மணிக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோட்டையம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story