அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் படுகாயம்


அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 March 2022 2:30 PM IST (Updated: 10 March 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீன்சுருட்டி, 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40), சரக்கு வாகன டிரைவர். இதே பகுதியை சேர்ந்த லோகநாதன் (31) என்பவருக்கு வருகிற 13-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி திருமணத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் சரக்கு வாகனத்தில் சென்றனர்.
மீன்சுருட்டி அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்னையிலிருந்து ராஜமன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில்  புதுமாப்பிள்ளை லோகநாதன் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அன்புமணி (56) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story