குடும்ப தகராறில் போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து சாவு


குடும்ப தகராறில் போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 9 March 2022 2:33 PM IST (Updated: 9 March 2022 2:33 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் போலீஸ்காரர் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,  

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலை போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 37). இவர் மெரினா போலீஸ் நிலையத்தில் ரோந்து கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (32). இவர்களுக்கு இலக்கியா (10) என்ற மகளும், தருண் (6) என்ற மகனும் உள்ளனர்.

போலீஸ்காரர் ஜெயசந்திரன் மது போதைக்கு அடிமையாகி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 3-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தேன்மொழி, அன்று இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story