வடபழனி முருகன் கோவில் தெப்பக்குளத்தில் பச்சை நிற பாசியை அகற்ற புதிய தொழில்நுட்பம்
வடபழனி முருகன் கோவில் தெப்பக்குளத்தில் பச்சை நிற பாசியை அகற்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகற்றுவது தொடர்பாக நேற்று ஆய்வு நடந்தது.
சென்னை,
சென்னை வடபழனி முருகன் கோவில் தெப்பக்குளத்தில் பச்சை நிற பாசி படர்ந்ததை தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகற்றுவது தொடர்பாக நேற்று ஆய்வு நடந்தது. இங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், சாக்கு பைகள் ஆகியவை கடந்த 2 நாட்களாக அகற்றப்பட்டு வருகிறது.
உயிர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 700 லிட்டர் ‘பயோ அனெலெக்ஸ்’ என்ற திரவத்தை தெப்பக்குளத்தில் தெளித்தவுடன் கெடுதல் செய்யும் நுண்ணுயிரிகளை இத்திரவம் அழித்து பாசி படராமல் இருக்க உதவும். தொடர்ந்து ‘ஓசிஏட்டி’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்திரத்தின் மூலம் தெப்பக்குளத்தில் உள்ள நீர் சுத்தம் செய்யப்பட்டு பச்சை நிற பாசி படராத வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னோட்டமாக வடபழனி முருகன் கோவில் தெப்பக்குளத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தமிழகத்தில் உள்ள பிற கோவில்களில் உள்ள பாசி படர்ந்த தெப்பக்குளங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பச்சை பாசி நிறத்தை அகற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்நிகழ்வின்போது கண்காணிப்பு பொறியாளர் மணிவண்ணன், பொது பணித்துறை தலைமை பொறியாளர் (ஓய்வு) இளங்கோவன், பொறியாளர் செல்வராஜ், கோவில் அலுவலர்கள் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story