காரைக்கால் அரசு வேளாண் கல்லூரியில் தோட்டக்கலை தொழில்நுட்ப கண்காட்சி


காரைக்கால் அரசு வேளாண் கல்லூரியில் தோட்டக்கலை தொழில்நுட்ப கண்காட்சி
x
தினத்தந்தி 9 March 2022 5:36 PM IST (Updated: 9 March 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேளாண் கல்லூரியில் தோட்டக்கலை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது

காரைக்கால், மார்ச்.9-
காரைக்கால் செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தோட்டக்கலை கண்காட்சியையும், காரைக்கால் தலத்தெரு இயற்கை விவசாயி இளங்கோ வேளாண் கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர். 
பழமையான வேளாண் கருவிகள் மற்றும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வேளாண் கருவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும், கடந்த 4 மாதங்களாக ஊரக பகுதிகளில் நேரடி களப்பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், தமிழகம், கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 130 வேளாண் மாணவ, மாணவிகள், தங்கள் அனுபவங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
கல்லூரி துணை பேராசிரியர் நந்தினி, இணை பேராசிரியர் ஆனந்த்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வழிக்காட்டினர். இந்த கண்காட்சியை காரைக்கால் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பார்வையிட்டனர்.

Next Story