1-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை- மந்திரி வர்ஷா கெய்க்வாட் பேச்சு


படம்
x
படம்
தினத்தந்தி 9 March 2022 5:38 PM IST (Updated: 9 March 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கட்டுப்பாடுகளால் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை என மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.

மும்பை, 
கொரோனா கட்டுப்பாடுகளால் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை என மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.

எழுத படிக்க தெரியவில்லை
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் மேல்-சபை உறுப்பினர் சுதிர் தாம்ப எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் பேசியதாவது:- 

மராட்டியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 47 ஆயிரத்து 277 மாணவர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் 32 ஆயிரத்து 888 பேர். ஆய்வின் போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 1-ம் வகுப்பு மாணவர்கள் 12 ஆயிரத்து 300 பேருக்கு (37 சதவீதம்) எழுத, படிக்க கூட தெரியவில்லை என்பது தெரியவந்து உள்ளது.

பயிற்சி வழங்கப்படும்

இது மாணவர்கள் குறைந்தப்பட்ச கல்வியை கூட தெரியாமல் உள்ள அதிகபட்ச சதவீதம் ஆகும். ஒட்டுமொத்தமாக எழுத, படிக்க தெரியாமல் 14.76 சதவீதம் மாணவர்கள் உள்ளனர். இந்த பிரச்சினை நேரடி, ஆன்லைன் பயிற்சிகள் மூலம் ஆசியர்களால் தீர்க்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.

Next Story