தங்கும் விடுதியின் மின் இணைப்பு துண்டிப்பு


விடுதி
x
விடுதி
தினத்தந்தி 10 March 2022 12:00 AM IST (Updated: 9 March 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் வாரியத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நாகூர்:-

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் வாரியத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 

பொதுத்துறை நிறுவனம்

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்(சி.பி.சி.எல்.) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் இங்கு வருவதில்லை. 
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி நாகூர் பண்டகசாலை தெருவில் உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் ரூ.7 ஆயிரத்து 85 பாக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாகூரை சேர்ந்த மின் வாரியத்தினர் பலமுறை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு கொடுத்தும், மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு

இந்த நிலையில் நேற்று தங்கும் விடுதியின் மின் இணைப்பை மின் ஊழியர்கள் துண்டித்தனர். நாகையில் இதுபோல் பல இடங்களில் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. 
இது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுவினர் இன்று (வியாழக்கிழமை) தஞ்சையில் இருந்து நாகை வர உள்ளதாகவும், மின் கட்டணம் செலுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story