கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 9 March 2022 6:42 PM IST (Updated: 9 March 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பள்ளிப்பட்டு,  

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, சொரக்காய் பேட்டை, வங்கனூர், ஆர்.கே. பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கூலி உயர்வு தர வேண்டும் என்று கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று 5-வது நாளாக தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் தொடர்ந்தனர். மேலும் இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொதட்டூர்பேட்டையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story