பஸ் மோதி அரசு ஊழியர் பலி


பஸ் மோதி அரசு ஊழியர் பலி
x
தினத்தந்தி 9 March 2022 7:03 PM IST (Updated: 9 March 2022 7:03 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ் மோதி அரசு ஊழியர் பலியானார்.

திருவள்ளூர்,  

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவர் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்துவிட்டு வீட்டுக்கு வந்துக்கொண்டு இருந்தார். அப்போது திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாளநகரில் உள்ள சாலை தடுப்பில் ஏறி சாலையை கடக்க முயன்றார். அப்போது கால் தடுக்கி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பஸ்சின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story