ராகவேந்திரர் ஜெயந்தி விழா: அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
வெளிப்பாளையம்:-
ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் ராகவேந்திரருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோால மாஞ்சாலி அம்மனுக்கு 10, 20, 50, 100 என மொத்தம் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story